திரு க.நீதிராஜா அவர்களின் கவிவரிகளில்..... - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 18, 2016

திரு க.நீதிராஜா அவர்களின் கவிவரிகளில்.....

எமது கிராமத்தின் பெருமை திரு க.நீதிராஜா அவர்களின் கவிவரிகளில்.....


கோட்டை எமது சொத்தாகும்
கோயில்கள் இங்குஅழகூட்டும்
ஏட்டையூம் பாடி பயன் சொல்வர்
நாட்டையூம் என்றும் மதித்திடுவர்
கிழக்கே கடல் அலை உயர்ந்துவரும்
மேற்கே விளை தருவாவியதும்
வடக்கும் தெற்கும் பாலங்களே
வண்ணமாய் இங்குதோன்றிடுமே
                                                                          (கோட்டை)

அம்பாரை வில்லான் ஆலயமும்
அழகுறு முருகன் கோயில்களும்
அன்னை கண்ணகி காத்திடுவாள்
ஆசியூம் வரமும் தந்திடுவாள்
மாரித்தாயார் வாழ்த்துரைப்பாள்
மனக்குறை எல்லாம் தீர்த்திடுவாள்
வளம் பல பெற்று வாழ்ந்திடவே
தலமது கொண்டார் புற்றடியாருமிங்கு
                                                                           (கோட்டை)

கோட்டைவாசல் ஆலயமும்
கோடி வரங்களைத் தந்திடுவார்
நாட்டைக் காக்கும் ஆலயமாம்
கோட்டையூர் சித்தி விநாயகராம்
சமய வேற்றுமை நாமறியோம்
சாதிக் கொடுமையூம் கேட்டறியோம்
கிறிஸ்தவர் கூட எம்மூரில்
சேர்ந்து மகிழந்து வாழ்கின்றார்
                                                                (கோட்டை)

கல்வி சிறக்க நற்கூடங்களும்
கற்றுக் கொடுக்கஎம் ஆசான்களும்
பள்ளி கொண்ட இவ் ஊரதுவில்
பார்க்கும் இடமெல்லாம் படித்தவரே
சமூக சேவைசங்கங்களும்
தரத்தில் உயர்ந்தஅமைப்புக்களும்
சான்றுகள் இங்குபகிர்ந்திடுமே
சரித்திரம் பலவூம்படைத்திடுமே
                                                                    (கோட்டை)

விளையாட்டிலெம்மவர் வீரர்களே
வெற்றிகள் பலவூம் சேர்த்திடுவர்
சுற்றியே எங்கும் சென்றிருவர்
பற்றிடுவர் கையில் கேடயமும்
உயர் அதிகாரிகள் அதிகமப்பா
தூயர் கொள் வீட்டிலும் சேர்ந்திடுவர்
கயவர்கள் கூட்டமும் இல்லையப்பா
கல்லாறுஎன்பது  ஊரதப்பா
                                                                       (கோட்டை)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here