ஆதவன் போல் புகழ் பரப்பும் கல்லாறு சதீஸ் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 26, 2016

ஆதவன் போல் புகழ் பரப்பும் கல்லாறு சதீஸ்


ஆதவன் போல் புகழ் பரப்பும் கல்லாறு சதீஸ் அவர்கள்
கடல் கடந்த நாடுகளிலெல்லாம் கல்லாற்றின்
மணமதைப் பரப்பி பனிப்பாறைகளும் சுடுகின்றன,
சொர்க்கங்களும் தண்டிக்கின்றன போன்ற பல
ஆக்கங்களை புனைந்தோடு மட்டுமல்லாமல் அதிக 
கவிதைகளையும் எழுதி கல்லாற்றின் புகழை நிலை 
நிறுத்திக் கொண்டிருக்கும் கல்லாறு சதீஸ் (சுவிஸ்) 
அவர்களை பற்றி ஒரு சில கவி வரிகள் 

வெண்பா

சீற்றமுறு கடலதுவும் தென்கிழக்கே ஓடை ஒன்றும்
காற்றிசைக்கும் நாற்றிசையும் அழகு செய்யும் அணைக்கட்டும்-ஏற்ற
தென்னையுடன் பனையினமும் சேர்ந்தொன்றாய் வளர்ந்திடுமே
அன்னையென நாம் வணங்கும் கோட்டைக்கல்லாறு

நன்னீரும் கடல் நீரும் கலந்தொன்றாய் ஆவதினால்
நண்டினமும் நல்ல இன இரால் வகையும் அதிகமிங்கு
மட்டி கவ்வாட்டி சட்டி நிறைந்திடுமே
முட்டி நிறை கள்ளும் முன்னர் அதிக மிங்கே

கடல் கடந்த நாடெல்லாம் கல்லாற்றின் மணம் வீசும்
மடல் வரைந்தால் கூட கல்லாறு முன்னிற்கும்
படல் திறந்த இடமெல்லாம் விழித்திடுமே கல்லாறு
உடலழகா கல்லாறு சதிஸ் வாழ்க நீடுழி !

பனிப்பாறை சுட வைத்தாய் சொர்க்கமதை தண்டித்தாய்
கனிந்த பழமது போல் கதைகேட்டு நாம் மகிழ்வோம்
இனித்திட பேசிடும் எம்மூர் கவிஞர் நீ
பனிபடர்ந்த மலையது போல் பார்த்தென்றும் ரசித்திடுவோம்

நந்தவனம் ஓர் அழகு நண்பர்களும்  நல்லழகு
உந்தன் கவியரசுமழகு அவர் கவியும் அழகுக்கழகு
கண் போன்ற மiனயாள் அழகு கண்மணிகள் உயர் அழகு
விண் போல் உயர்ந்த வித்தகா நீயும் அழகு
என்றும் அன்புடன்                                                    க.நீதிராஜா (JP)
                                                                        நித்திலம்
                                                                        கோட்டைக்கல்லாறு-02
                                                                        இலங்கை  (26.01.2016)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here