இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, March 2, 2016

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியான சுமத்திராவில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சுமத்திராவின் தென்மேற்கே, பதாங் நகருக்கு பல நூறு கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் யு.எஸ்.ஜி.எஸ். தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி மாலை 6.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் 10கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்க மையம் இருந்தது. இதுவரை சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் இல்லை. 

இதனையடுத்து மேற்கு சுமத்திரா உட்பட சுமத்திராவின் பகுதிகள், வடக்கு சுமத்திரா, அசே ஆகிய இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதிக கடல் ஆழமில்லாத பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்கள் கடும் சேதம் விளைவிக்கக் கூடியவை, ஆனால் இந்த நிலநடுக்கம் முவாரா சைபருட் நிலப்பகுதிக்கு 662 கிமீ தொலைவில் ஏற்பட்டுள்ளதால் பாதிப்பு குறைவாகவே ஏற்படலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான யு.எஸ்.ஜி.எஸ். தெரிவித்துள்ளது.

நன்றி த ஹிந்து

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here