வாசகர் வட்டத்தின் பரிசளிப்பு விழா - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 6, 2016

வாசகர் வட்டத்தின் பரிசளிப்பு விழா

கோட்டைக்கல்லாறு பொது நூலக வாசகர் வட்டத்தின் பரிசளிப்பு விழாவானது நேற்று  2016.03.04  பிற்பகல் 3 மணியளவில்  பொதுநூலக  மண்டபத்தில் திரு மு.சிவானந்தராஜா(வாசகர் வட்ட தலைவர் ,முன்னாள் கிராமசேவகர் ) அவர்கள்  தலைமையில் இடம்பெற்றது.

எமது கிராமத்திலுள்ள 3 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கு   கோட்டைக்கல்லாறு பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் திறமையை வெளிக்காட்டியவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இப் பரிசளிப்பு விழா இடம்பெற்றது

நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  மா.நடராஜா அவர்களும் விசேட அதிதியாக  திருமதி யாகேஸ்வரி வசந்தகுமார் (செயலாளர் ம.தெ.எ.ப பிரதேச சபை), திரு.மு.தம்பிராஜா(ஆலயங்களின் வண்ணக்கர்) , திருமதி பி.சுரேஷ் றோபட் (சனசமூக  அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்  .தெ.எ.ப பிரதேச சபை ) அவர்களும் பாடசாலை அதிபர்கள் ,கிராம உத்தியோகஸ்த்தர்கள் பொதுமக்கள் என பலர் சமூகமளித்திருந்தனர்.


இவ் வாசிகசாலையானது ஆரம்ப காலத்தில் எமது கிராமத்தில் வசதி படைத்தவர்களின் உதவியுடன் தினசரிப்பத்திரிகைகளை  கொண்டு மட்டும் செயற்பட்டு வந்து பின்னர் பிரதேச சபை ஊடாக பத்திரிகைகள்  வழங்கப்பட்டு  தற்போது  சுமார் 500 நூல்களுடன் ஓர் சிறு நூலகமாக இயங்கிவருகின்றது. இதனை அங்கீகாரம் பெற்ற நூலகமாக தரமுயர்த்துவதற்கு 3000 நூல்கள் தேவைப்படுவதாகவும் அதனை எமது கிராமத்தை சேர்ந்தவரும் தற்போது சுவீஸ்லாந்து நாட்டில் வசிக்கும் "கல்லாறு சதீஸ்" அவர்கள் அண்மையில் இந் நூலகத்திற்கு வருகை தந்தபோது தான் அவ் 3000 நூல்களை 3 மாத காலத்திற்குள்  பெற்றுத்தருவதாக உறுதியளித்தையும் அவருக்கு நன்றியையும் தலைமையுரையில்  வாசகர் வட்ட தலைவர்  மு.சிவானந்தராஜா அவர்கள் தெரிவித்தார்.

சிறார்களின் கலைநிகழ்ச்சிகளும் திறமையை வெளிக்காட்டிய மாணவகளுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் அதிதிகளால் வழங்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்   திரு மா.நடராஜா அவர்கள் ஓர் மனிதனின் வளர்ச்சியில் தேவாலயம்,கலாலயம், நூலாலயம் எனும் 3 ஆலயங்கள் பின்னிப்பிணைந்தவை  அவனை பூரணத்துவமடைய வைப்பவை ஆனால்  இன்றைய தலைமுறை  தொலைக்காட்சியில் மூழ்கி சினிமா மோகத்துடன் சமூகம் சீரழிவதையும் இதற்கு பெற்றோரும் ஓர் காரணம் எனவும் எமதுகிராமத்தில் சிறந்த ஓர் வாசிகசாலை ஒன்று உருவாக எல்லோரும் முன்னிக்க வேண்டும்  அதனூடாக எமது பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கவேண்டும் எனவும்  எனக்குறிப்பிட்டார்.

கிராம மக்களின் பங்களிப்புடன்  பெறப்பட்ட ஓர் தொகுதிப் புத்தகங்கள் வாசிகசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டது.  

எமது கிராமத்து மாணவர்களின்  திறமையை ஊக்குவிக்கும் வகையில் நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு பாராட்டப்பட வேண்டியது அவர்களின் உழைப்பு மதிக்கப்படவேண்டியது. அதிக மாணவர்கள் பரிசில்பெற அழைக்கப்பட்டிருந்தனர். இருந்தும் அப்பரிசில்களை பெற குறிப்பிட்ட சில மாணவர்கள் சமூகமளிக்காதது எமக்கு வருத்தத்தை அளித்தது இதனை மாகாண சபை உறுப்பினர்   அவர்களும் தனது உரையில்  வருத்தத்துடன் குறிப்பிட்டு காட்டினார் இது அம் மாணவர்களின் பெற்றோர்களின்  அலட்சிய போக்கை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.


மாதா, பிதா ,குரு ,தெய்வம்






































No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here