சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 17, 2016

சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று  17.4.2016  இரத்ததான நிகழ்வொன்று கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.  இவ் இரத்தான நிகழ்வுக்கான அனுசரணையினை திரு விஜயராசா விஜயரூபன் அவர்கள் வழங்கினார். கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி ஊழியர்கள் இரத்ததான நிகழ்வை திறம்பட நடாத்தினர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாகாண சபை உறுப்பினர் மா. நடராஜா அவர்கள் கலந்து கொண்டதோடு சங்கத்தின் உறுப்பினர்கள், போஷகர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொது மக்கள்  என 50 இற்கும் மேற்பட்டோர்  கலந்து
தங்கள் குருதியை கொடையாக வழங்கினர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வானது பி. ப 1.30 மணி வரை நடைபெற்றது. இதன் பிறகு வைத்தியசாலை ஊழியர்களுக்கும் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கும் மதிய போசனமும் நடைபெற்றது.














No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here