வைத்தியகலாநிதி சீ.நவரெட்ணம் அவர்கட்கு நன்றிகள்... - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 26, 2016

வைத்தியகலாநிதி சீ.நவரெட்ணம் அவர்கட்கு நன்றிகள்...

எமது கிராமத்து   உயர்தர  கணித விஞ்ஞான பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் முகமாகவும் 
கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய வாசிகசாலையில் நிலவும் புத்தக பற்றாக்குறையையும் மாணவர்களின் தேவைகளையும் அறிந்து அதை நிவர்த்தி செய்யும் முகமாக இன்று 23.05.2016 அன்று  வைத்திய கலாநிதிகளான திரு சீ. நவரெட்ணம் மற்றும் திருமதி ஜோகறஞ்சிதம்  நவரெட்ணம் அவர்களால் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்துக்கு ரூபாய் (60,000.00) அறுபதினாயிரம் பெறுமதியான புத்தகங்கள் கையளிக்கப்பட்டன.


இப்புத்தகங்கள் அனைத்தும் கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டு வைத்திய கலாநிதிகளான திரு திருமதி நவரெட்ணம் ஜோகறஞ்சிதம் தம்பதிகளால் நேரடியாக பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கபட்டது. அத்துடன் 2017 ஆகஸ்ட் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களையும் சந்தித்து அவர்களுக்கு அறிவுரைகளையும் உற்சாகப்படுத்தும் நல்லாசிகளையும் வழங்கினார்கள்.



கோட்டைக்கலாறு கல்விச்சமூகத்திற்கு அளப்பரிய சேவைகளை ஆற்றிவரும் வைத்தியகலாநிதி சீ.நவரெட்ணம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எமது இணையதளம்  சார்பிலும் கோட்டைக்கல்லாறு கல்விச்சமூகத்தின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 






No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here