பொது மயானம் தொடர்பாக கிராம அபிவிருத்திக் குழு நிருவாகக் கூட்டம் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 30, 2016

பொது மயானம் தொடர்பாக கிராம அபிவிருத்திக் குழு நிருவாகக் கூட்டம்

கோட்டைக்கல்லாறு கிராம அபிவிருத்திக் குழு  நிருவாகக் கூட்டம் இன்று (2016-07-30) பிற்பகல்  5 மணியளவில்  பொது நூலக கேட்போர் கூடத்தில் குழுத்தலைவர் க.உதயகுமார்  அவர்களின்  தலைமையில் ஆரம்பமானது. இக் கூட்டத்தில் பிரித்தானியா கோட்டைக்கல்லாறு ஒன்றிய தலைவர் திரு புனிதன் அவர்கள் கலந்து கொண்டு, அவ் ஒன்றிய நிருவாக கூட்டத்தில் எமது கிராமத்தின்   நீண்ட கால  பிரச்சனையான  பொது மயானம் தொடர்பாக எமது மண்ணின்  மூத்த பொறியியலாளருள் ஒருவரும் சிறந்த சமூக சேவகருமான  திரு நா.பஞ்சாட்சரம் அவர்களினால் சமர்பிக்கப்பட்ட  ஆய்வுக்குட்படுத்தப்பட்ட  நடைமுறை சாத்தியமான  முன்மொழிவுகள் அடங்கிய பிரேரணை  தொடர்பாக சிறு விளக்கம் அளிக்கப்பட்டதோடு மயானம் தொடர்பாக   எமது  கிராம மக்களின் கருத்துகளை அறிந்துகொள்ளும் வகையில்  விரைவில்  ஓர்  பொதுக்கூட்டம் ஒன்றினை ஒழுங்கமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here