கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா 2018 ஆனது தலைவர் த. நிஷாந்தன் தலைமையில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் கடந்த 06.11.2018 காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
இதில் பிரதம அதிதிகளாக வைத்திய கலாநிதி சீ.நவரெட்ணம் (போசகர், சமூக உயர்கல்வி சேவைகள் சங்கம்) அவர்களும் மற்றும் வைத்திய கலாநிதி யோகரஞ்சிதம் நவரெட்ணம், எந்திரி நா. பஞ்சாட்சரம் (போசகர், சமூக உயர்கல்வி சேவைகள் சங்கம்) அவர்களும், சிறப்பு அதிதியாக திரு எஸ்.பாக்கியராஜா (முன்னாள் பீடாதிபதி, தேசிய கல்விக்கல்லூரி, மட்டக்களப்பு) அவர்களும், வைத்தியர் எஸ். கிருஸ்ணகுமார் (சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், களுவாஞ்சிக்குடி) அவர்களும், எந்திரி க.பிரதீபன் (பொறியியலாளர்,நீர்ப்பாசனதிணைக்களம், கிழக்கு மாகாணம்) அவர்களும், திரு சோ.ஜெகன் (மாவட்ட அஞ்சல் அட்தியேட்சகர், தபால் திணைக்களம், மட்டக்களப்பு) அவர்களும், திரு கு.குபேரன் (பொது சுகாதார பரிசோதகர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், போரதீவுப்பற்று) அவர்களும் திரு கி.குருசாந்தன் (உள்ளுராட்சி உதவியாளர், பிரதேச சபை போரதீவுப்பற்று, ஆலோசகர் சமூக உயர்கல்வி சேவைகள் சங்கம், கோட்டைக்கல்லாறு) அவர்களும் திரு.சா.திருநாவுக்கரசு (ஆலயங்களின் முன்னைநாள் வண்ணக்கர், கோட்டைக்கல்லாறு) அவர்களும் கௌரவ அதிதிகளாக திரு. க. செல்வராஜா (அதிபர் மட்ஃபட் கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயம்) அவர்களும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் தலைவர் தமது தலைமையுரையில் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் சங்கத்தின் பெருமுயற்சியால் க.பொ.த உயர்தரத்திற்கு தொழிநுட்ப பீடம் கொண்டுவரப்பட்டமை,மாணவர்களின் ஒழுக்க சீர்கேடுகள் பற்றியும் சங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் திட்டங்கள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.
சிறப்பு அதிதியாக திரு எஸ்.பாக்கியராஜா (முன்னாள் பீடாதிபதி, தேசிய கல்விக்கல்லூரி, மட்டக்களப்பு) அவர்கள் தமது உரையில் மாணவர்களின் ஒழுக்க சீர்கேடுகள் தொடர்பாகவும் பாடசாலை நிர்வாகத்தின் தளர்வான இறுக்கத்தன்மை தொடர்பாகவும் சிறப்பாக உரையாற்றினார்.
பிரதம அதிதி தனது உரையில் உயர்தர மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கும் வீதம் குறைவடைந்துள்ளமையையும் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் உயர்தர வகுப்புக்கான மீட்டற்பயிற்சி வகுப்புக்களுக்கு சமூகமளிக்கும் வீதம் குறைவடைந்து வருவதனையும் சுட்டிக்காட்டினார்.
இதில் 2017 ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 5A தரத்திற்கு மேல் சித்திபெற்ற மாணவர்கள், 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு மற்றும் கல்விக்கல்லூரிக்கு தெரிவான மாணவர்கள், தரம் 3 தொடக்கம் 13 வரையான வகுப்புக்களில் ஒவ்வொரு பிரிவிலும் சாராசரி அடிப்படையில் முதல் மூன்று நிலைகளை பெற்ற மாணவர்கள், மாகாண மட்ட மற்றும் தேசிய ரீதியிலான போட்டிகளில் வெற்றி பெற்ற, ஜனாதிபதி விருது பெற்ற மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இத்துடன் வழமைபோன்று சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் போசகர் வைத்திய கலாநிதி சீ.நவரெட்ணம் அவர்களால் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களுக்கும், க.பொ.த சாதாரண தரத்தில் 5A தரத்தை விட கூடிய சித்திபெற்ற மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மற்றும் கல்விக்கல்லூரிக்கு தெரிவாகிய மாணவர்களுக்குமான பொற்கிளிகள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் செயலாளர் திரு செ.ருக்ஷன் தமது நன்றியுரையில் இவ்விழைவிற்கு நிதியுதவி வழங்கிய எமது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நன்கொடையாளர்களுக்கும் கலைநிகழ்ச்சிகள், மண்டப ஒழங்கு, Multimedia screen என்பவற்றை ஒழுங்குபடுத்தி தந்த மட்/பட்/ கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய அதிபர் திரு.எஸ் தம்பிப்பிள்ளை அவர்கட்கும் வாண்ட் வாத்திய அணிவகுப்பை ஒழுங்குபடுத்தித் தந்த மட்/பட்/ கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் வித்தியாலய அதிபர் திரு.க.செல்வராஜா அவர்கட்கும் விழா ஒழுங்குபடுத்தலில் சகல விதத்திலும் உதவிகளை செய்து தந்த சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment