பரிசளிப்பு விழாவும்,திருவுருவச்சிலை திறப்புவிழாவும் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 28, 2014

பரிசளிப்பு விழாவும்,திருவுருவச்சிலை திறப்புவிழாவும்

கோட்டைக்கல்லாறு தெய்வநெறிக் கழக அறநெறிப் பாடசாலையின் 2014ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலை திறப்புவிழாவும் இன்று(2014.09.28) முற்பகல் 10.30 மணியளவில் கோட்டைக்கல்லாறு கிழக்கு பல்தேவைக்கட்டடத்தில் தெய்வநெறிக்கழக தலைவர் திரு.S.மனோகர் அவர்கள் தலைமையில் ஆரம்பமானது.இந்நிகழ்வின் ஆன்மீக அதிதியாக முத்தமிழரசு சிவயோகச்’ செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்களும்,பிரதம அதிதிகளாக கௌரவ M.நடராசா(மாகாண சபை உறுப்பினர்),கலாநிதி M.கோபாலரெத்தினம் (பிரதேச செயலாளர்,மண்முனை தென் எருவில் பற்று),திரு சா.திருநாவுக்கரசு(ஆலயங்களின் வண்ணக்கர்),திருமதி குமுதினி பரமசிவம்(இந்துகலாச்சார உத்தியோகஸ்தர், ம.தெ.எ பற்று) பாடசாலை அதிபர்கள்,பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலையினை பிரதம அதிதியாக கலந்துகொண்ட கலாநிதி M.கோபாலரெத்தினம் (பிரதேச செயலாளர்,மண்முனை தென் எருவில் பற்று) அவர்களும் திரைநீக்கம் செய்து வைக்க கௌரவ M.நடராசா(மாகாண சபை உறுப்பினர்) அவர்கள் மலர்மாலை அணிவித்தார். அதனை தொடர்ந்து சமய சம்பிரதாய நிகழ்வுகளான மங்கள விளக்கேற்றல்,இறை வணக்கம், ஆகியவற்றுடன் அறநெறிப் பாடசாலை மாணவிகளினால் அறநெறி கீதமும்,கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய மாணவர்களால் சுவாமி விவேகானந்தரின் பிரார்த்தனை பாடலும் பாடப்பட்டது, அதனைத் தொடர்ந்து ஆசியுரையை ஆன்மீக அதிதியாக வருகை தந்த முத்தமிழரசு சிவயோகச்’ செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்கள் வழங்கினார்,கௌரவ M.நடராசா(மாகாண சபை உறுப்பினர்) அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட ஒலிபெருக்கி சாதனம் மாகாண சபை உறுப்பினர் M.நடராசா,பிரதேச செயலாளர் M.கோபாலரெத்தினம் ஆகியோரால் அறநெறிப்பாடசாலை அதிபர் திரு.ந.இராசரெத்தினம்,தெய்வநெறிக்கழக தலைவர் திரு.S.மனோகர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.முன்னைநாள் இந்து சாரதா மகளிர் மன்ற தலைவியான திருமதி சீவரெத்தினம் கேசகபிள்ளை அவர்களை மாகாண சபை உறுப்பினர் M.நடராசா,முத்தமிழரசு சிவயோகச்’ செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்கள் பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் கௌரவித்தனர்.அத்துடன் சிற்பக்கலைஞர் திரு S.சுரேஷ் அவர்களின் கலை திறமையினை பாராட்டி கௌரவ அதிதியாக வருகைதந்த ஆலயங்களின் வண்ணக்கர் திரு சா.திருநாவுக்கரசு அவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.அதனை தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த செல்வன் சுவர்ணராஜ் அபிஷேக் அவர்களை முத்தமிழரசு சிவயோகச்’ செல்வன் சாம்பசிவசிவாச்சாரியார் அவர்கள் மாலை அணிவித்து ஆசி வழங்கினார்.















                                   

















No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here