ரஜினியின் லிங்கா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரூ 70 கோடிக்கு வாங்கியுள்ளது வேந்தர் மூவீஸ். இதன்படி கோவை தவிர்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடும்.
லிங்கா படத்தின் தமிழக உரிமையைப் பெற கடும்போட்டி நிலவி வந்தது. இதில் முந்திக் கொண்ட வேந்தர் மூவீஸ், தமிழகம் மற்றும் கேரளாவுக்கான உரிமையைப் பெற ரூ 80 கோடி வரை விலை பேசி வந்தது. லிங்கா படங்கள் ஆனால் இந்த விலைக்குத் தர ஈராஸ் நிறுவனம் தயாராக இல்லை.
அதே சமயம் கோவையைச் சேர்ந்த நகைக் கடை நிறுவனம் ஒன்று கோவை பகுதிக்கான உரிமையை மட்டும் பெரும் விலைக்குக் கேட்டு வந்தது. கேரள உரிமைக்கும் ரூ 10 கோடிக்கு மேல் தர விநியோகஸ்தர்கள் தயாராக இருந்தனர்.
எனவே கோவை பகுதி நீங்களாக தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை மட்டும் வேந்தர் மூவீசுக்குக் கொடுத்துள்ளனர்
ஈராஸ் நிறுவனத்தினர். இதற்கு விலையாக ரூ 70 கோடியைத் தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மாநிலத்தில் படத்தை வெளியிடும் உரிமைக்காக இவ்வளவு பெரிய தொகை தரப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment