கல்லாறு சதீஷ் கனடாவில் விருது பெற்றார் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 10, 2015

கல்லாறு சதீஷ் கனடாவில் விருது பெற்றார்

கனடா உதயன் பத்திரிகை சர்வதேச விருது விழா 2015 இல் ஐரோப்பிய தமிழ் சாதனையாளருக்கான சிறப்பு விருதினைக் கல்லாறு சதீஷ் பெற்றுக்கொண்டார்.

தமிழ் இலக்கியத்துக்கும்,தலைமைத்துவத்துக்கும்,சர்வதேச நட்புறவுக்குமான வெற்றியாளராக இனங்காணப்பட்ட கல்லாறு சதீஷ் இந்த மாபெருங் கெளரவத்திற்கான விருதினைப் பெற்றுக் கொண்டார்.

ஒன்றாறியோ அரச சான்றிதழ்,உதயன் வாழ்த்து கேடயம்,கனடா அரச பாராளுமன்ற சான்றிதழ்,உதயன் நினைவுக் கேடயம்,ரொரன்டோ நகரசபை பாராட்டுப் பட்டயம் என்பன வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

கல்லாறு சதீஷ் சுவிஷ் வர்த்தக நிறுவனங்களின்தலைவராகவும்,சுவிஷ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவராகவும்,சுவிஷ் தமிழர்களின் அடையாளமாகவும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது இணையதளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here