பொதுக் கூட்ட நிகழ்வுகள் (CHESS) - 2015 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, August 30, 2015

பொதுக் கூட்ட நிகழ்வுகள் (CHESS) - 2015

சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் வருடாந்த  பொதுக்கூட்டமானது  இன்று  2015-08-30 ம் திகதி மாலை 4 மணியளவில்  கோட்டைக்கல்லாறு கிழக்கு பல்தேவை கட்டிடத்தில் அமைந்துள்ள சமூக உயர்கல்வி சேவைகள் சங்க அலுவலகத்தில் தலைவர் சி.அகிலன்  தலைமையில் இடம்பெற்றது . 

இக் கூட்டம் தலைவரின் தலைமையுருடன் ஆரம்பமாகி சென்றவருட கூட்டறிக்கை ,சென்ற வருட கணக்கறிக்கை மற்றும் சங்கத்தின் கடந்தகால செயற்பாட்டறிக்கை என்பன வாசிக்கப்படு அது சரியானது என்று சபையினரால் ஏகமதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது . (கணக்கறிக்கை, கடந்தகால செயற்பாட்டறிக்கை என்பவற்றை பதிவிறக்கம் செய்ய அவர்களின் உத்தியோகபூர்வ இணையதளமான  http://www.koddaikallarchess.com  இணை நாடும் படி தெரிவித்தனர் ) 

 

அதன் பின்னர் சங்கத்தின் புதிய நிர்வாக உறுப்பினர்கள்  தெரிவு இடம்பெற்றது 
இதன் போது புதிய 

தலைவராக                           திரு. வி.சுபேஷன்   அவர்களும்
செயலாளராக                       திரு. ந  .சந்தோஷ்  அவர்களும் 
பொருளாளராக                    திரு. த  .பிரமிநாந்   அவர்களும்  


உப தலைவராக                    திரு .  இ . சிவதர்ஷன்  அவர்களும்
உப செயலாளராக               செல்வி.    .கஜேந்தினி   அவர்களும்

கணக்காய்வாளராக          திரு. த.குணநாதன்  அவர்களும்

நிர்வாக சபை உறுப்பினர்களாக 
1. சி. அகிலன் 
2. த.நிஷாந்தன் 
3. மு.தனுஷன்
4. s. சுபாஸ்கரன் 
5.  ந.பிரகீஷ் 
6. கோ.அருண்  

சங்கத்தின் ஆலோசகர்களாக 
1. திரு .ஏ  .அருள் பிரகாசம்
2. திரு .சி . சிவலிங்கம்
3. திரு .ச . சரவணபவான் 


ஆகியோர்களும் சபையினரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய தலைவர் திரு. வி.சுபேஷன் அவர்கள் உரையாற்றுகையில் தன்னை தலைவராக தெரிவு செய்ததற்கு அனைவர்க்கும் நன்றியை தெரிவித்ததுடன் தொடர்ந்தும் நமது சங்கத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளை எடுப்பேன் எனவும் . கோட்டைக்கல்லாற்றின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவது சங்கத்தால் இயன்ற உதவிகளை செய்வேன் என்றும் அதற்கு சங்க உறுப்பினர்கள் அனைவரும் உதவி புரியவேண்றும் எனவும் கேட்டு கொண்டார். 


மேலும் பிறவிடயங்களில் முக்கியமாக  சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் இந்த வருடத்திற்கான பரிசளிப்பு விழா  சம்பந்தமான விடயங்கள் ஆராயப்பட்டன . இன் நிகழவில் சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின்   உறுப்பினர்கள்  பலர் கலந்து கொண்டனர் .







No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here