கவிதை 9 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 2, 2015

கவிதை 9

„மலரும் முகம் பார்க்கும் காலம்' கவிதைத் தொடர்
தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் மலரும் முகம் பார்க்கும் கவிதைத் தொடரின் ஒன்பதாவது (9)தொடர்ச்சிக் கவிதையை எழுதியவர் ஜேர்மனியில் வசிக்கின்ற படைப்பாளி திருமதி. மாலினி மாலா அவர்கள்.
இவரின் கவிதையுடன் அவரின் படத்தையும் 01.09.2015 ஆகிய இனறு இம்முகநூலிலும் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முகநூலுலிலும் பதிவு செய்து மகிழ்கின்றோம். 
வழமை போல் இவரின் கவிதை பண்ணாகம் இணையத்தளம் அக்கினிக்குஞ்சு இணையத்தளம் கோட்டைக்கல்லாறு இணையத்தளங்களிலும் வெளிவரும் எனபதை அறியத்தருகின்றோம்.
எமது வேண்டுகோளை ஏற்று இக்கவிதைத் தொடரில் பங்குபற்றி ஒத்துழைப்பு நல்கிய திருமதி. மாலினி மாலா அவர்களுக்கு பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

கவிதைத் தொடர்ச்சி 9 மாலினி மாலா,ஜேர்மனி







இனவழியறிவோடு
சிகரத்துக் கேகுவோம்
முகவரிகள் நாம் பதிக்க
முகமூடிகள் அகற்றிய
முழுமனித பாதைகளின்
முதல் வழியில்
தடம் பதிப்போம்.
கனவுகள் வரைந்த
காட்சிகளின் பாதைகளில்
உணர்வுகளை வழிநடத்தி
உள்ளங்களை வென்றெடுத்து
ஒன்றிணைந்த வேள்விகளால்
உயிர் கொடுத்தேனும்
உச்சங்கள் நாம் தொடுவோம் .
வாழ வந்த பூமியிலே
வாதங்களை வளர்த்து நிற்கும்
பேதங்களை களைந்து விட்டு
வந்து வாழ்ந்த காரணத்தை
சென்ற பின்னும்
சிறப்பில் வைக்கும்
சிகரங்களாய்
செதுக்கிச் செல்வோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here