கவிதை 10 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 2, 2015

கவிதை 10

„மலரும் முகம் பார்க்கும் காலம்' கவிதைத் தொடர் 
தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் மலரும் முகம் பார்க்கும் கவிதைத் தொடரின் பத்தாவது (10) தொடர்ச்சிக் கவிதையை எழுதியவர் ஜேர்மனியில் வசிக்கின்ற இளம் படைப்பாளியும் பல்கலைக் கழக மாணவியுமான செல்வி. சறீகா சிவநாதன் அவர்கள்.

இவரின் கவிதையுடன் அவரின் படத்தையும் 01.09.2015 ஆகிய இனறு இம்முகநூலிலும் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முகநூலுலிலும் பதிவு செய்து மகிழ்கின்றோம்.
வழமை போல் இவரின் கவிதை பண்ணாகம் இணையத்தளம் அக்கினிக்குஞ்சு இணையத்தளம் கோட்டைக்கல்லாறு இணையத்தளங்களிலும் வெளிவரும் எனபதை அறியத்தருகின்றோம்.
எமது வேண்டுகோளை ஏற்று இக்கவிதைத் தொடரில் பங்குபற்றி ஒத்துழைப்பு நல்கிய செல்வி. சறீகா சிவநாதன் அவர்களுக்கு பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

கவிதைத் தொடர்ச்சி 10 கவிதையை எழுதியவர்: 
செல்வி.சறீகா சிவநாதன், ஜேர்மனி









ஒவ்வொரு கனவும் மெய்யாகும்
இந்த விதைகள் உறங்கப் போவதில்லை
நோடி நேரம்கூட இவை
சாத்தியமற்றதாக இருக்கப் போவதில்லை
சூழ்நிலைகள் நமக்கு எதிராய் இருக்கையிலும்
சுழலும் சிந்தனையில் புது வழிகள் பிறந்திடட்டும்
தன்மேல் உள்ள நம்பிக்கையில் தானே
மலைகள்கூட இங்கு நகர்ந்திருக்கு
வலிதாண்டி விதி மாற்றும் விடியலுக்கு மட்டும்
வடிகட்டி திறமையை தேர்ந்தெடுக்க முடியும்
கற்களை மிதித்து மற்றவரை மதிப்பவர்க்கு மட்டும்
நிமிர்ந்து நின்று பணிவோடு வெற்றி ஏந்த முடியும்
மலரும் முகம் பார்க்கும் காலம்
சிதறுண்டு போகும் நம் வழித் தடைகள்
விழிவழியே இரசித்திடும் பரிணாமம்
இனி கையசைவிலே வசமாகும் காலம்
கீழே விழுகின்ற நொடிகள் யாவும்
மேலே காணும் இமயத்துக்காய் இருக்க வேண்டும்
இணைந்தே உலகில் சாதனைகளை செதுக்கிச் செல்வோம்
வரலாற்றின்; செதுக்கலில் நம் பெயர் நாளை செப்பப்படும்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here