கவிதைத் தொடர் : 11 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, September 4, 2015

கவிதைத் தொடர் : 11

தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் மலரும் முகம் பார்க்கும் கவிதைத் தொடரின் பதினோராவது(11) தொடர்ச்சியை எழுதுபவர் நோர்வேயில்: வசிக்கும் நோர்வே நக்கீரா என்ற புனைபெயரைக் கொண்ட படைப்பாளி திரு.திலீபன் திருச்செல்வம் அவர்கள்.
அவரின் கவிதையையும் புகைப்படத்தையும் இம்முகநூலிலம் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் முகநூலிலும் இன்று(04.09.2015) மகிழ்வுடன் பிரசுரிக்கின்றோம்.
பண்ணாகம் இணையத்தளத்திலும்,அக்கினிக்குஞ்ச இணையத்தளத்திலும், கோட்டைக்கல்லாறு இணையத்தளத்திலும், யாழ் இணையத்தளத்திலும் இக்கவிதை பிரசுரமாகும்.
எமது வேண்டுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்றிய திரு.நோர்வே நக்கீரா அவர்களுக்கு பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்.
-------------------------------------------------
மலரும் முகம் பார்க்கும் காலம்
கவிதைத் தொடர் : 11 
ஆக்கம்: நோர்வே நக்கீரா (திலீபன் திருச்செல்வம்)நோர்வே
வரலாற்றுச் செதுக்கலில் நாளை
வரமாய் எம்பெயர் செப்பப்படும் - மொழிக்கலப்பில்
குறளாறாய் தமிழ் குறுகுமாலை
குவலயத்தில் பெயர் கருக்கப்படும்
மலரும் முகம் பார்க்கும் காலம் - வரலாற்றில்
புலரும் புதுத்தமிழ் என்று கூறும்
வரவு வைத்து ஓடும் ஆறே வரலாறு – தமிழில்
உறவு வைத்து ஓடுவதே எம் பேறு
பொதிகையிலே புதுமையுடன் பிறந்த மகள் - பூவுலகில்
பதிகையென தன்பாதம்தனைப் பதித்த இவள்
அகத்தியன் கரம்பிடித்து கைவீசி ஒளிர்ந்த அகல் - அன்னிய மொழி
தரித்திரியன் தாழ்பணிய மறுத்திடுவாள் மங்கையிவள்
கங்கைமுதல் கடாரம் வரை வெற்றிவாகை சூடினாள்
இமயம்முதல் குமரிவரை முத்தமிழாய் ஆடினாள்
இதயமெங்கும் இன்னுயிராய் உணர்வுகளில் ஏறினாள் - புது
கமலமுகம் மலருமொரு காலமதைத் தேடுவாள்
சங்கம் வைத்து சாகரமாய் வளர்ந்தவளே
சங்காரம் சகயமென சமயமனம் சமைத்தவளே
ஓங்காரப் பொருளாய் „ஓம்' என்று ஒலித்தவளே – எதிரிமொழிகள்
அகங்காரம் அழித்து யாம் எனவே வாழியவே

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here