மறைவின் மாயமென்ன - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 30, 2015

மறைவின் மாயமென்ன

எமது இணைய ஊடக பயணத்தில்  சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும் எம்மோடு தோள் கொடுத்த ஐயா பிரிதிவிராஜ் பவித்திரன் அவர்களின் மறைவு எங்கள் இதயத்தை  உலுக்கியது...........

அறிவுக் களஞ்சியமே அன்பின் இருப்பிடமே
செறிவாய் நீ வாழ்ந்தாய் சேதி பல சொல்லிடுவாய்
பணிவதனை உன்னிடத்தில் பக்குவமாய் நாம் கண்டோம் 
துணிந்த எழுத்தாளா துயர் கொள்ள ஏன்  வைத்தாயே!

கோட்டையூர்  வந்ததினால் குலத்திலே நீ உயர்ந்தாய் 
வீட்டையும் நேசித்தாய்  வீண் சேதி பேசிடாய் நீ
நாட்டுக்கேற்ற நல்ல நாயகனே  பவித்திரனே -உன்
கூட்டை விட்டு ஆவிதனை கொடிய யமன் ஏன் பறித்தான்

நம் இணையம் வளர்க்க இன் சேவை பல செய்தாய்
பணயம் வைத்திடுவாய் உன் உயிரை நீ மதியாய்
நோய் உனை வாட்டினாலும் நொந்து நீ கிடந்தாலும் 
சேய் போல எமைக்காத்த சீரிய குணத்தோனே

சமயமும் தழைக்க வைத்தாய் சேவைகள் பல செய்தாய் 
சுமுகமாய் மீனவரின் வாழ்வுயர வழி செய்தாய்
எல்லோர்க்கும் இனியவனாய் இன்பமாய் நீ வாழ்ந்து
சொல்லொணா துயரமதை தூயவனே ஏன் தந்தாய்

இறப்பும் பிறப்பும் இறைவன் விதியன்றோ
பிறப்பிருந்தே நீரும் பிரியமாய் வாழ்ந்து வந்தாய்-உனை
பிரமனும் படைத்தானோ பிறருக்கு சேவை செய்ய
உறவையும் அழவைத்து உத்தமா எங்கு சென்றாய்...


சத்தியமாய் சொல்லுகிறோம் உன் இடம் நிரப்ப யாருமில்லை இப் பாரினிலே

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here